edappadi palanisamy pressmeet about arukkuty

தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்குக் கோரி அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டார்.

டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விவசாயிகளின் போராட்டம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறிய எம்.எல்.ஏ. ஆறுகுட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி எங்கள் அணிக்கு வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் குறித்த கேள்விக்கு, கோவை மக்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்கள் மன நிறைவு பெறும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.