தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து லஞ்சம் பெற்றதாக சில அமைச்சர்களின் பெயர்கள்,  அவரிடம் இருந்து வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த டைரியில் இருந்தது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் நொந்து போன முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகர் இடைத்  தேர்தலின்போது இதை யார் வெளியிட்டார்கள் என ரகசியமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணல் மாபியா என்று  அழைக்கப்படும் சேகர் ரெட்டியின் டைரியில் ஓபிஎஸ், ஆர்.பி.உயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்தாக குறிப்பட்டிருந்த பக்கங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இந்த லிஸ்ட் வெளியானதும், ஓபிஎஸ்சை  தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.  ஆர்.கே.நகரில் தேர்தல் சமயத்தில் யாரு இப்படி ஒரு வேலையை பார்த்திருப்பாங்க? இது கட்சிக்கும் ஆட்சிக்கும் மிகப் பெரிய கெட்ட பெயரை உண்டாக்கும். தேர்தல் பிரசாரத்திலேயே எதிர்க்கட்சிகள் இதை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பாங்க. என்ன செய்யலாம்னு நீங்கதான் சொல்லணும்! என்று கேட்டுள்ளார்.

அதற்கு கூலாக பதில் சொன்ன ஓபிஎஸ், ’ ‘எப்பவோ நடந்த தப்புக்கு இப்போ என்ன செய்ய முடியும்? டைரியில் ஒரு பக்கம் கிடைச்சதால எட்டு பேரு இருந்திருக்கு... இன்னொரு பக்கம் கிடைச்சிருந்தா உங்க பேரும் கூட இருந்திருக்கலாம். எல்லாத்தையும் நாம சமாளிச்சுதானே ஆகணும்..என கூறியதால் இபிஎஸ் கடுப்பாகியுள்ளார்.

இந்த பதிலை எதிர்பார்க்காத  இபிஎஸ், சரி இப்ப எப்படியும் இதற்கு பதில் சொல்லித்தானே ஆகனும்…தேர்தல் வேற நடக்கப்போகுது… இப்பப் பார்த்து   குற்றச்சாட்டு வந்துடுச்சு... ஏற்கெனெவே நம்மை காலி பண்ண டைம் பார்த்துட்டு இருக்காங்க என குமுறியிருக்கிறார்.

தொடர்ந்து மற்ற அமைச்சர்களிடமும் இபிஎஸ் பேசியபோது, , இதெல்லாம் இப்போ நடக்கலை. தேவை இல்லாமல் இப்போ இந்த விவகாரத்தை தேர்தலை மனசுல வெச்சுதான் கிளப்பிட்டு இருக்காங்க. நீங்க நடவடிக்கை எடுக்கிறதாக இருந்தால் எடுங்க...’ என்று  சொல்லியிருக்கிறார்கள்.

நான் நடவடிக்கை எடுக்கிறதுக்காக கேட்கல.. இப்போ எப்படி வந்துச்சுன்னு தெரியுமான்னு விசாரிக்கத்தான் கேட்டேன்’ என்று மட்டும் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தான் இது குறித்து ரகசியமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி….