edappadi palanisamy meeting with PM modi

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில், அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில், முதல்வர் எடப்பாடி, டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேசி வருகிறார். இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுகவின் மற்றொரு அணி தலைவரான ஓ.பி.எஸ். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் இல்லத்தில் மோடியை, தற்போது சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வருமானவரித்துறை சோதனை, ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு விளக்கம் உள்பட பல விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தமிழகத்தில் எடப்பாடி அணிக்கு எதிராக எம்எல்ஏக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பிரதமரை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.