Asianet News TamilAsianet News Tamil

கட்டப்பஞ்சாயத்து! தோண்டி எடுத்த உளவுத்துறை! கருணாஸ் சரண்டரானதன் பின்னணி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திடீரென எம்.எல்.ஏ கருணாஸ் சரண்டர் ஆனதன் பின்னணியில் பல கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை உளவுத்துறை தோண்டி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

Edappadi palanisamy-karunas meets...Background!
Author
Tamil Nadu, First Published Jan 3, 2019, 9:43 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திடீரென எம்.எல்.ஏ கருணாஸ் சரண்டர் ஆனதன் பின்னணியில் பல கட்டப்பஞ்சாயத்து விஷயங்களை உளவுத்துறை தோண்டி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த  ஆண்டு விளையாட்டுத் தனமாக பேசப் போய் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார் கருணாஸ். தியாகராயநகர் டிசி அரவிந்தனுக்கு எதிராக ஆர்பாட்டம் என்று கூறி வள்ளுவர் கோட்டம் அருகே நாடார்கள், கவுண்டர்களை பற்றி கருணாஸ் பேசியதால் சமூக வலைதளங்கள் பற்றி எரிந்தது. இதனால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் தான் உள்ளார் கருணாஸ். Edappadi palanisamy-karunas meets...Background!

ஜாமீனில் வந்த பிறகும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அனலை கக்கி வந்தார் கருணாஸ். தொடர்ந்து தினகரன் ஆதரவாளராகவே அவர் வலம் வந்தார். கருணாசை வளைக்க தி.மு.க போட்ட திட்டமும் கைகொடுக்கவில்லை. இதனிடையே கருணாஸ் தன்னிடம் உள்ள கூவத்தூர் வீடியோவை வெளியிட உள்ளதாக கூறியதை தொடர்ந்து அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. Edappadi palanisamy-karunas meets...Background!

கைதாகி வெளியில் வந்த பிறகும் கூட கூவத்தூர் விஷயம் குறித்து பலரிடம் கருணாஸ் பேசி வந்தார். இது அப்போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய கருணாசுக்கு எதிராக டி.சி அரவிந்தனும் பல்வேறு முஸ்தீபுகளை மேற்கொண்டு வந்தார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக டிபன்டர் தாமோதரன் என்பவருடன் சேர்ந்து கருணாஸ் கட்டப்பஞ்சாயத்து செய்வது குறித்து தான் டி.சி அரவிந்தன் அதிக ஆர்வம் காட்டினார். 

இதற்கு உளவுத்துறையில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் அரவிந்தனுக்கு உதவியுள்ளனர். கருணாசின் கடந்த கால விவகாரங்களை தோண்டி போது வடபழனி, வளசரவாக்கம் பகுதிகளில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் கருணாஸ் பெயர் பயன்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கருணாசை பயன்படுத்தி நிலத்தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் விவகாரத்தை எல்லாம் தீர்த்திருப்பது தெரியவந்தது.

 Edappadi palanisamy-karunas meets...Background!

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிலரை டி.சி. அரவிந்தன் பர்சனலாக சந்தித்து பேசிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதாது கட்டப்பஞ்சாயத்து விஷயங்களில் கோடிக்கணக்கில் பணம் கைமாறிய விவகாரம் தெரியவந்தது.  இந்த விவரங்களை எல்லாம் நோட் போட்டு மேலிடத்திற்கு அனுப்பியுள்ளார் அரவிந்தன். மேலும் இது தொடர்பாக சில செல்போன் உரையாடல்களையும் அரவிந்தன் டேப் செய்ததாக கூறப்படுகிறது. தனக்கு எதிராக டி.சி.பி அரவிந்தன் காய் நகர்த்துவதை அறிந்த கருணாஸ்க்கு எடப்பாடியிடம் சரண் அடைவதை தவிர வேறு வழியே இல்லை. இதனால் கடந்த டிசம்பரிலேயே எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கருணாஸ். Edappadi palanisamy-karunas meets...Background!

சந்திக்க தயார் அதற்கு முதலில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான மனுவை திரும்ப பெற வேண்டும் என்று எடப்பாடி தரப்பிடம் இருந்து கருணாஸ்க்கு கண்டிசன் வந்துள்ளது. அதனை அடுத்த நாளே நிறைவேற்றியுள்ளார் கருணாஸ். இதனை தொடர்ந்தே தலைமைச் செயலகத்தில் கருணாஸ் – எடப்பாடி சந்திப்பு அரங்கேறியுள்ளது. இனி சட்டப்பேரவையிலும் கருணாஸ் எடப்பாடி ஆதரவாளராகவே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios