நான் நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறாமைப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார். அப்போது மத்திய, மாநில அரசையும் கடுமையாக விமர்சித்தார். கிராமங்களுக்குச்சென்று மக்களை சந்தித்த வரலாறு திமுகவை தவிர வேறு எந்தக்கட்சிக்கும் கிடைக்காது. 

கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், என்னிடம் எப்படி ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் என ஆச்சரியத்துடன் கேட்டனர். காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்றார். நான் நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறாமைப்படுகிறார். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவே நான்கரை ஆண்டுகள் என்றால், எப்போது செயல்பாட்டுக்கு வரும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களையும், தமிழர்களின் வரலாற்றையும் மூடி மறைக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது என குற்றம்சாடட்டியுள்ளார்.