தமிழகத்தில் கொரொனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.மால் தியேட்டர்கள் சந்தைகள் இன்னும் திறக்கப்படவில்லை.மாவட்ட எல்லைக்குள் பஸ்கள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மத்திய அரசு 25ம் தேதி விமான சேவைகள் தொடங்க திட்டமிட்டு அதற்கான உத்தரவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரபிறப்பித்துள்ளது.


 
தமிழகத்தில் விமான சேவைகள் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்த நிலையில் தமிழகத்தில் விமான சேவைகளை ஒத்தி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியுள்ளார்.
"நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு மே இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 முதல் சென்னையிலிருந்து பெங்களூர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானசேவைகள் தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்." தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விமான சேவைகளை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தொடங்க வேண்டாம் என்றும், ஜூன் மாதம் முதல் விமான சேவையை தொடர கோரியும் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது..