சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக கொடியேற்றுகிறார். 

நாடு முழுவதும்  சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதையடுத்து  தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய சுதந்திர தின விழா கொண்டாடபட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

சென்னை நகரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றுகிறார். இதையொட்டி காமராஜர் சாலையில் கண்கவர் வண்ண நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்றன.

இதேபோல் சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.