விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்த ஏ.சி.சண்முகம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்காமலா இருப்பார்..!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 20-ம் தேதி இந்த கௌரவ பட்டம் வழங்கப்படும் என அந்நிறுத்தின் தலைவர் மற்றும் வேந்தர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்த பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டோர் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 20-ம் தேதி இந்த கௌரவ பட்டம் வழங்கப்படும் என அந்நிறுத்தின் தலைவர் மற்றும் வேந்தர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். டாக்டர் ஏ.சி.சண்முகம் சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி ஆதரவில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்தார். இந்நிலையில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வேலூர் மாநகர மேயர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த 2007-ம் ஆண்டு இதே பல்கலைக்கழகம் நடிகர் விஜய்க்கு கௌரவ டாக்டர் பட்டமும், அதேபோல 2017-ம் ஆண்டு நடிகர் விஜயகுமாருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.