மோடியை வளைத்துப்போட்ட எடப்பாடி..! பிப்ரவரி 14ல் அதிரப்போகும் தமிழக அரசியல் களம்..!
சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் கூறியதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் கூறியதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல் நாள் இரவும் மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, வரலாற்றில் முதல் முறையாக சசிகலாவிற்கு எதிராக வாய் திறந்தார். கடந்த நான்கு வருடங்களில் ஒரு முறை கூட எடப்பாடி பழனிசாமி சசிகலாவிற்கு எதிராக எதுவும் பேசியதில்லை. ஏன் ஒரே ஒரு முறை சசிகலா குறித்து பேசிய போது கூட சின்னம்மா என்று மரியாதையாகவே அவரை குறிப்பிட்டிருந்தார். இதனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவருடன் எடப்பாடி உடன்பாடு செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா தற்போது அதிமுகவிலேயே இல்லை, அவரை மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தடலாடியாக அறிவித்தார். சசிகலா குறித்து இவ்வளவு துணிச்சலாக எடப்பாடி பேசியது எப்படி என்று அப்போதே பேச்சுகள் எழுந்தன. மேலும் பாஜகவின் மேலிடத்தை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேர்தல் வியூகத்தை எடப்பாடி வகுத்து முடித்தவிட்டதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையில் மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் மதுரைக்கு சென்று ஜெயலலிதா, எம்ஜிஆர் கோவிலை திறந்துவைத்து விட்டு அடுத்த பிளைட்டிலேயே சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி. இத்தனைக்கும் மதுரையில் ஜே.பி. நட்டா இருந்தார். ஒரு மரியாதைக்கு கூட அவரை சென்று எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அன்று இரவு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுநாள் வரை அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் யாரும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர். ஆனால் நட்டா கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ந் தேதி சென்னை வருகிறார். காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும், சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட பணிகளை துவக்கி வைக்கவும் மோடி சென்னை வர உள்ளார். கடந்த முறை டெல்லி சென்ற போதே இந்த பணிகளை துவக்கி வைக்க சென்னை வருமாறு எடப்பாடி மோடியிடம் கோரியிருந்தார். இதனை ஏற்றே பிரதமர் தற்போது சென்னை வர சம்மதித்துள்ளதாக சொல்கிறார்கள். இது தனிப்பட்ட முறையில் மோடி எடப்பாடி பழனிசாமி இடையிலான நெருக்கத்தை காட்டுவதாக சொல்கிறார்கள்.
அதாவது பாஜகவில் ஒரு தரப்பினர் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் நிலையில் மோடியே எடப்பாடிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் பிப்ரவரி 14ந் தேதி சென்னை வரும் மோடிக்கு இதுவரை அவர் கண்டிராத வகையில் வரவேற்பு கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். மேலும் அன்றைய தினமே பாஜக – அதிமுக கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மோடியும் – எடப்பாடியும் இணைந்து தமிழக அரசியல் களத்தை அதிர வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு பாமக, தேமுதிக கட்சிகளோடும் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய தற்போது அதிமுக மும்முரம் காட்டி வருகிறரதாம். பிரதமர் மோடியே எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக இருப்பதால் இந்த கட்சிகளும் கூட்டணியில் விரைவில் சேர்ந்து திமுகவை எதிர்க்க தயாராகும் என்கிறார்கள்.