ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  110வது விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டு அசத்துவார் அதேபோல சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;25 கோடி ரூபாயில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் நவீன அரிசி ஆலையும், 59 கோடியே 40 லட்சம் ரூபாயில் பல்வேறு இடங்களில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 28 கிடங்குகளும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் காய்கறிகள், பழங்கள், புளி, பருப்புவகைகள், பூ உள்ளிட்ட விவசாயப் பொருட்களை சேமிக்க 3.75 கோடியில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவில் சூரிய மின்சக்தியுடன் குளிர்சாதனக் கிடங்கு அமைக்கப்படும். 

125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 36 கோடியே 41 லட்சம் ரூபாயில் சொந்தக் கட்டிடங்கள் அமைக்கப்படும் என்றும் 143 கூட்டுறவு நிறுவனங்கள் 24 கோடியே 91 லட்சம் ரூபாயில் நவீனமயமாக்கப்படும்.

5 கோடியே 82 லட்சம் ரூபாயில் நியாய விலைக் கடைகளில் 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் 39 கோடியே 37 லட்சம் ரூபாயில் 36,500 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 149 கிடங்குகள்

57 கோடியே 70 லட்சம் ருபாயில் 577 கிலோமீட்டர் தூர வனச்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தப்படும் 

சிட்லப்பாக்கம் ஏரியை சீரமைக்க 25 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.