கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூ.5 ஆயிரத்து 912 கோடியை கர்நாடகம் ஒதுக்கீடு செய்து விட்டது. அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட் களை கொண்டு வந்து குவித்து விட்டார்கள். 

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தபின் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, காவிரி பிரச்னையில் நாடாளுமன்றம் முடங்கியதால்தான் நாடே நம்மை திரும்பி பார்த்தது.  அது போல வரும் நாட்களில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்று பேசினார். அதன்பின் அவர், இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது.