Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்திற்கு டாட்டா காட்டி சென்ற டாடா நிறுவனம்.!புதிய முதலீடுகள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காணவில்லை-இபிஎஸ்

டாடா நிறுவனம் தமிழகத்தை விட்டு அசாம் மாநிலம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அத்துடன் கூடவே ரூ.25ஆயிரம் கோடி முதலீடும் சென்று விட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.
 

Edappadi Palanisami has said that the Tata company has left Tamil Nadu KAK
Author
First Published Feb 18, 2024, 6:51 AM IST | Last Updated Feb 18, 2024, 8:26 AM IST

தமிழகத்திற்கு தொழில்முதலீடு

தமிழகத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தி 7 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்த்தார். இதனையடுத்து ஸ்பெயின் சென்ற அவர் தமிழகத்தில் தொழில்களை தொடங்க முன் வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இது போன்ற பல்வேறு முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளாதாக ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை விமர்சிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Edappadi Palanisami has said that the Tata company has left Tamil Nadu KAK

தமிழகத்தை விட்டு சென்ற டாடா

அதில்,  தொழில் துறையில் தொட்டதற்கெல்லாம் கொள்கைகளை வெளியிடும் கொள்கை இலக்கற்ற விடியா அரசில், பெரிய நிறுவனங்களின் புதிய முதலீடுகள் ஏதும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காணவில்லை.  அம்மாவும் -அம்மாவின் அரசாலும் துவக்கப்பட்ட தொழிற்சாலைகளே தங்களது புதிய கிளைகளை தமிழ்நாட்டில் பரப்புகின்றன, விடியா ஆட்சியில் புதிதாய் ஏதும் வந்ததாய் தெரியவில்லை,

 

செமி கண்டக்டர் [ Semi Conductor] எனப்படும் குறை கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்க தனி கொள்கை வகுத்தாலும் நிர்வாகத் திறனற்ற அரசின் குறைபாட்டால் , டாடா நிறுவனம் தமிழகத்தை விட்டு அசாம் மாநிலம் சென்றுள்ளது. அத்துடன் கூடவே ரூ.25ஆயிரம் கோடி முதலீடும் சென்று விட்டது. ஊதியம், வேலைவாய்ப்பு என இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றாமல் இருள் சூழ வைக்கும் விடியா அரசுக்கு எனது கண்டனங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இந்தியாவின் 2ஆவது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios