Following the attacks on Tamil Nadu fishermen fisherman piritco shot the voice would be raised in Parliament on behalf of the AIADMK
தமிழக மீனவர் பிரிட்சோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்....

முதல் அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலம் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாகக் கூறினார்.

கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்த எடப்பாடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் சீரோணுக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல் குறித்து அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
