edappadi meets modi and ops discussion with mp mla
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்து பேசி வருகிறார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது அணி நிர்வாகிகளுடன், ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பிரதமரை சந்திக்க இன்று காலை அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில், மோடியுடன் அவர் பேசி கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு அணி தலைவரான ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில், அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், மதுசூதனன், பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திப்பது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவதாக தெரிவித்தனர்.
தற்போதய குழப்பமான அரசியல் சூழலில் பிரதமர் மோடியை எடப்பாடி சந்திக்கும் அதே நேரத்தில் சென்னையில் தன் ஆதரவு எம்பி , எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
