தமிழகத்துக்கு இந்த ஆண்டு நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

மருத்துவ படிப்புற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து இந்த ஆண்டு தமிழகத்தில் முதன்முறையாக நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் நேற்று பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்கஉள்ளதையொட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அனு ஒன்றை அளித்தார். இதைக் பெற்றுக் கொண்ட மோடி அது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.