edappadi meeting with mla in admk office

அதிமுக தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் அதிமுகவினர் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கிடையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லையென்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக தலைமையகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசணை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததற்குப் பிறகு முதன்முறையாக எடப்பாடி தலைமையில் கட்சிக் கூட்டம் கூட்டப்பட உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.