வாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்களை தேர்தலில் சொல்லி மக்கள் ஏமாற்றும் திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். காணை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது திமுகவை விமர்சித்து வாக்கு சேகரித்தார்.
 “ நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான் வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது. திமுகவை நம்பி தமிழக பெண்கள் ஏமார்ந்து வாக்களித்தார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. நம்பிக்கை துரோகம் செய்த திமுகவுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுங்கள். வாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்களை தேர்தலில் சொல்லி மக்கள் ஏமாற்றும் திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.