Asianet News TamilAsianet News Tamil

கோடி கோடியாய் கொட்டினாலும் அரியணையை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் முதல்வர்... அமெரிக்காவில் எடப்பாடியாரே வெளியிட்ட ஆதாரம்..!

தமிழகத்தில் தனது முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றாலும் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

Edappadi is the first to leave the throne in America
Author
Tamil Nadu, First Published Sep 6, 2019, 5:29 PM IST

தமிழகத்தில் தனது முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றாலும் தனது நாற்காலியை விட்டுக்கொடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. Edappadi is the first to leave the throne in America

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரத்துக்கு சென்ற அவர் தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார்.

 Edappadi is the first to leave the throne in America

அவர் வெளிநாட்டுக்கு கிளம்பும் முன் தனது முதல்வர் பதவியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தனது பதவியை தனக்கு நெருக்கமான அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் சென்று விட்டார். Edappadi is the first to leave the throne in America

தற்போது அமெரிக்காவில் யாதும் ஊரே என்கிற பெயரில் முதலீட்டாளர்களை திரட்டி அவர்களிடம் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், தான் தங்கி இருக்கும் இடத்திற்கே முதலீட்டாளர்களை வரவழைத்து பேசி வருகிறார். அவருடன் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோரும் உடனிருக்கின்றனர். அமைச்சர்கள் ஒரு புறமாகவும், முதலீட்டார்கள் ஒருபுறமாகவும் அமர்ந்திருக்க நடுவில் உள்ள ஷோபாவில் அமர்ந்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் அமர்ந்திருந்த ஷோபாவை ஓரம் கட்டி விட்டு அதனருகில் இருக்கைகளை போட்டு அமைச்சர்கள் இருக்கும் பக்கத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 

 

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை காண்பவர்கள் தமிழகத்தில் முதல்வர் நாற்காலியை மட்டுமல்ல அமெரிக்காவில் தான் அமர்ந்த நாற்காலியிலும் யாரும் உட்காரக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios