Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிரடி... உதயநிதிக்கு உதறல் காட்டப்போகும் எடப்பாடி..!

. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி செல்லும் போது அவரைப் பிரச்சாரக் களத்திலேயே கைது செய்யும் அதிரடித் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  

Edappadi is going to show support for Udayanidhi
Author
Tamil Nadu, First Published Dec 19, 2019, 6:23 PM IST

தி.மு.க இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அரசியல் களத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.

 Edappadi is going to show support for Udayanidhi

திமுக இளைஞரணி சார்பில் கடந்த 13-ம் தேதி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களிலும் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி சட்ட திருத்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்தார். இதனையடுத்து தி.மு.க. இளைஞரணியினர் 644 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.  உதயநிதி சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நடத்திய போராட்டம் மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்கும் தகவலாக தெரிவிக்கப்பட்டது.

 Edappadi is going to show support for Udayanidhi
 உடனே தமிழக அரசைத் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சகம், சட்ட மசோதாவை எரித்த போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?  என கடிந்து கொண்டுள்ளது. இதனால் உதயநிதி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து  காவல்துறை உதயநிதி 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி செல்லும் போது அவரைப் பிரச்சாரக் களத்திலேயே கைது செய்யும் அதிரடித் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios