ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் இடது வலது புறமாக அமர்ந்து மதுரை சென்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, அ.தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வழிநெடுகிலும் கட்சி தொண்டர்களை பேனர்களோட நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால், ஸ்டாலினை வரவேற்க, தி.மு.க., நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர். தொண்டர்கள் கூட்டத்தை காணவில்லை. நிர்வாகிகளும் ஸ்டாலினை வரவேற்க முண்டியடித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ., கம்பம் ராம
கிருஷ்ணனுக்கு காயம் பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்ததால், முதலில் ஸ்டாலினை பாதுகாப்பு போலீசார் வெளியில் அனுப்பி விட்டார்கள். வெளியே வந்த ஸ்டாலின் கண்ணில் அதிமுக கொடிகளாகவே தென்பட'அப்செட்' ஆகி, விருட்டென காரில் ஏறி, ஹோட்டலுக்கு சென்று விட்டார். பிறகு வெளியே வந்த முதல்வர் எடப்பாடியாருக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தார்கள்.