அந்த வாட்ஸ் அப் தகவல் வாசிப்பவர்களை மெர்சலாக்குகிறது. அ.தி.மு.க. அரசின் செம்ம சென்டிமெண்ட் நிறமான பளீர் பச்சை நிறை பேக்டிராப்பில் பல்லி மிட்டாய் சைஸ் எழுத்துக்களுடன் ’தமிழ்நாடு அரசு’ என்ற தலைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த  அறிவிப்பு ஏரிகளில் இலவசமாக மண் எடுத்தல் பற்றிய தகவல்களை விளக்குகிறது இப்படி...

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்காணுமாறு இலவசமாக ஏரிகளில் இர்நுது மண் எடுத்துப் பயன் அடைவீர்.

கிராம நிர்வாக அலுவலரை அணுகவும்
1.    வண்டல் வகை மண்ணை விவசாய பயன்பாடுக்காக ஒரு ஏக்கருக்கு முப்பது டிராக்டர் எடுக்கலாம். 
2.    களி மண்ணை மண்பாண்டங்கள் தயாரிப்புக்காக ஒரு நபர் இருபது டிராக்டர் வரை எடுக்கலாம். 
3.     கிராவல் மற்றும் சவுடு வகை மண்ணை சொந்த பயன்பாடுக்காக ஒரு நபர் பத்து டிராக்டர் வரை எடுக்கலாம். 
என்கிறது. 

இந்த அறிவிப்பு விளம்பரத்தில் பெரிய சைஸ் போட்டோவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், சிறிய சைஸ் போட்டோவாக எடப்பாடியாரும் ஸ்மைலுகிறார்கள். 

கோயில் கோயிலாக தூர் வார ஆரம்பித்திருக்கும் ஸ்டாலின் விட்டால் ஆட்சியையே தூர்வாரிடுவாரோ என்று நொந்து நகம் கடித்தவாறே இப்படி ஒரு திட்டம் உருவாகியிருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து விழுகின்றன. 
எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!