போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கத்தினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஊதிய உயர்வு, நிலுவை தொகை, ஓய்வூதியம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கேட்ட ஊதிய பேச்சுவார்த்தையில் அரசு கூறியதில் இருந்து சற்று ஊதியத்தை உயர்த்த அரசு முன்வந்தது. 

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்.

இதனிடையே அரசு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களை வைத்து நிலைமை சரிசெய்ய முடிவு செய்தது  தமிழக அரசு. 

இதைதொடர்ந்து தற்போது திடீரென தமிழக அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

இதற்கு காரணம் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு என தமிழக அரசு கூறியது. 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாதத்தின் கடைசி நாள். தமிழக அரசு சம்பளம் வழங்கியது. இதில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.