edappadi avoided dinakaran in a marriage
முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தின் இல்லத் திருமண விழாவில் டி.டி.வி.தினகரனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே கலந்து கொண்டனர்.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் .
இதையடுத்து தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு செய்தனர். கட்சி, ஆட்சி என எதிலும் தினகரன் கலந்து கொள்ளக் கூடாது என தெரிவித்தனர்.

இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்களுக்கும் டி.டி.வி தினகரனுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
தினகரனுக்கு ஆதரவாக 32 எம்எல்ஏக்கள் 2 எம்.பி.க்கள் செயல்பட்டு வருகின்றனர். கட்சிக்கு டி.டி.வி.தினகரன், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என டீல் பேசினர் . ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்க விலை.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழக அரசின் டெல்லி சிறப்பிபிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தின் இல்லத் திருமண விழா, வேளச்சேரியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க இரு தரப்பினரும் தனித் தனியாக வந்தனர்.. டி.டி.வி.தினகரன் முதலில் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து வந்த எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே திருமண நிகழ்ச்சிக்கு வந்து சென்றனர்.
