cm edappadi announced relief fund for fisherman family

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோ குடும்பத்துக்கு5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தனுஷ்கோடி ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 21 வயதான பிரிட்ஜோ என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார்.

இதற்கிடையே இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் சீரோணுக்கு 1லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.