Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸை ஓரம் கட்டப்பார்க்கும் இபிஎஸ்... தனியாக அறிக்கைவிட்டதன் ரகசியம் என்ன?

நான்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக மக்கள் அ.தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

edappadi and team plan avoid ops and gang
Author
Chennai, First Published May 16, 2019, 10:20 AM IST

நான்கு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக மக்கள் அ.தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில்,“ ஜெ வழியில் செயல்படும் இந்த ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே வரும் காலங்களில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் தொடந்து கிடைக்க  19-ம் தேதி நடக்க விருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்” என சொல்லியிருக்கிறார் முதல்வர்.

எப்போதுமே அ.தி.மு.க சார்பில் வெளியிடப்படும் அறிக்கையில் கட்சியின் ஒருகிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என இரு பெயர்கள் இடம் பெறும் .ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஓ.பி.எஸ் பெயர் இல்லாமல் இ.பி.எஸ் பெயர் மட்டும் இருந்தது. ஏற்கனவே இ.பி.எஸ் ஓ.பி.எஸை ஒதுக்கி வைக்கிறார் என்ற குற்றசாட்டு கட்சியினரிடம் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios