Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி... அதிமுக- பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்..?

கோவை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ‘வெற்றிவேல்... வீரவேல்’ என பிரதமர் மோடி முழக்கமிட்ட மோடி இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். 

Edappadi and ops shouting at  Modi  ... Sudden turn in AIADMK-BJP alliance ..?
Author
Tamil Nadu, First Published Feb 25, 2021, 6:10 PM IST

கோவை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ‘வெற்றிவேல்... வீரவேல்’ என பிரதமர் மோடி முழக்கமிட்ட மோடி இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். Edappadi and ops shouting at  Modi  ... Sudden turn in AIADMK-BJP alliance ..?

 கோவையில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றிவேல்... வீரவேல் என தனது பேச்சை ஆரம்பித்தார்.  இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர். கோவையில் மட்டுமே மத்திய அரசின் கடன் திட்டத்தால் 25 ஆயிரம் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன’’ அவர் தெரிவித்தார். தற்போது வரை பாஜக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, இரு கட்சிகளுக்குமிடையே தொகுதிப்பாங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. Edappadi and ops shouting at  Modi  ... Sudden turn in AIADMK-BJP alliance ..?

கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் சூழலில் இங்கு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர் என மோடி பேசி இருப்பது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜக தனியாக போட்டியிடப்போகிறதா? அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தே ஆட்சியில் பங்கு கேட்கப்போகிறதா? என்கிற குழப்பத்தை அதிமுகவினரிடையே ஏற்படுத்தி உள்ளார் மோடி. ஏற்கெனவே அதிமுக எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, மற்றொரு பிரிவான அமமுக என முக்கோண சிக்கலில் பிளவுபட்டுத் தவித்து வருகிறது. இப்போது மோடியின் இந்தப்பேச்சு எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios