எடப்பாடி- ஓ.பி.எஸ் போட்ட அதிரடி உத்தரவு... இன்று மாலைக்குள் அது நடக்க வேண்டும்..!
அதிமுகவில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்றுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். பாமகவை நடத்தியது போல்தான் தேமுதிகவையும் நடத்தினோம்
தங்களது கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக உத்தரவிட்டுள்ளது. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து 3-கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், இறுதியில் தேமுதிக சார்பில் தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், மாவட்ட கழக செயலாளர்களுடன் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் பேசிய புகழேந்தி, “அதிமுகவில் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்றுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். பாமகவை நடத்தியது போல்தான் தேமுதிகவையும் நடத்தினோம்” என்றார். பாஜக சார்பில் பேசிய கே.டி.ராகவன், “இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவும் தேமுதிகவும் பேச்சுவார்த்தை நடத்தின. பாஜக அதில் தலையிடவில்லை. இந்த கூட்டணி இணைய வேண்டும் என இப்பொழுதும் பாஜக விரும்புகிறது” என தெரிவித்தார்.
இந்நிலையில், தங்களது கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.