edappaadi and ttv dinakaran group fight in thiruvarur

திருவாரூர் நன்னிலத்தில் கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் டிடிவி தரப்ப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் மோதல் முற்றி வருகிறது. இதனால் நன்னிலம் கட்சி அலுவலத்திற்கு வட்டாட்சியர் நோட்டிஸ் ஒட்டியுள்ளார். 

திருவாரூர் மாவட்ட செயலாளராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செயல்பட்டு வருகிறார். இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.காமராஜை நீக்குவதாகவும், அப்பதவிக்கு எஸ் காமராஜை நியமனம் செய்வதாகவும் டிடிவி தினகரன் அண்மையில் அறிவித்தார். 

இதையடுத்து நேற்று மாலை எடப்பாடி தரப்பினரும் டிடிவி தரப்பினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை எழுந்தது. 

இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த ஆர்டிஓ தனலட்சுமி உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டததையடுத்து கட்சி அலுவகலத்திற்கு நோட்டீஸ் ஒட்ட ஆர்.டி.ஓ உத்தரவிட வட்டாட்சியர் ஒட்டினார். 

இதை தொடர்ந்து இருந்தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. டிடிவி தரப்பு ஆதரவாளர்கள் கூச்சலிட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

தகவலறிந்து வந்த டிஎஸ்பி அருண் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.