ஆளுங்கட்சி பணத்தை அள்ளி வீசி, தினகரனுக்கு ஓட்டு கேட்ட அ.தி.மு.க.வினர்: எக்கச்சக்க டென்ஷனில் எடப்பாடி, வாயடைத்துப் போன செங்கோட்டையன். 

இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதிகளில் தங்களது வெற்றிக்கான ஒரு சாணக்கியத்தனமாக, தி.மு.க.வின் நிர்வாகிகளை பணத்தைக் கொட்டி ஆளுங்கட்சி விலைக்கு வாங்கிய கொடுமை தெரியும். ஆனால் இதற்கு ரிவர்ஸ் ரிவிட் விழுந்துள்ள கூத்து தெரியுமா?
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மானாமதுரையும் ஒன்று. இங்கே தேர்தல் பணிக்காக கட்சி தலைமை சார்பில் கொடுக்கப்பட்ட கணிசமான கோடிகளை, கழக நிர்வாகிகள் சிலர் அமுக்கிவிட்டதாக ஒரு பஞ்சாயத்து எழுந்தது. உடனே முதல்வர், அமைச்சர் செங்கோட்டையனை அங்கே ஸ்பெஷல் ஆஃபீஸராக நியமித்து விசாரணையை நடத்திட சொன்னார். 

ராப்பகலாக உட்கார்ந்து விசாரணை நடத்திய செங்கோட்டையன் ஒரு கட்டத்தில் வெளியான உண்மையை  கண்டு வாயடைத்துப் போனாராம். காரணம்?...தங்கள் கட்சியின் பணத்தை தங்கள் நிர்வாகிகளே சுருட்டியிருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் நடந்திருக்கும் கூத்தோ வேற லெவலாம்.

என்ன தெரியுமா?....

அதாவது மானாமதுரை தொகுதியில்  உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும்  வாக்காளர்கள் அகியோரை உற்சாகப்படுத்திட வழங்கப்பட்ட  மிக மிக கணிசமான பணத்தை எடுத்து வாக்காளர்களிடம் கொடுத்து ‘மறக்காம பரிசுப்பெட்டிக்கு ஓட்டு போட்டுடுங்கண்ணே! பரிசுப்பெட்டியை மறக்காதீங்க அப்பச்சி, அம்மச்சி’ என்று தினகரனுக்காக ஓட்டு வேட்டையாடி இருக்கின்றனர் அங்கிருக்கும் ஆளுங்கட்சி நிர்வாகிகள். இதுதான் செங்கோட்டையனை கண் சிவக்க வைத்துவிட்டது. 

அவர் மேலும் விசாரித்தபோது “சிவகங்கை மாவட்டத்துல தினகரனுக்கு செல்வாக்கு அதிகம் தலைவரே. சிவகங்க நாடாளுமன்ற தொகுதியில நம்ம கூட்டணி வேட்பாளர் ராஜா, தி.மு.கா. கூட்டணி வேட்பாளர் கார்த்திய விட தினகரன் ஆளு தேர்போகி பாண்டிதான் பெருசா கலக்குறாப்ல. இப்ப இங்ஙன மானாமதுரயில அவரோட கட்சிக்கு நம்மாளுங்க ஓட்டு கேட்டா மாதிரி, எம்.பி. தேர்தல்லேயும் அவர் கட்சிக்காகவே நம்மாளுங்க பல பேரு உழைக்கிறாய்ங்க. என்ன பண்றது, நம்ம கட்சி காச எடுத்து வீசி தினகரனுக்காக கூவுறாய்ங்க. கேட்டாக்க, ’இந்த காசே சின்னம்மா மூலமாதானே நம்ம கட்சி தலைவருங்களுக்கு வந்துச்சு. நீங்க நன்றி மறக்கலாம், நாங்க அப்படியில்லப்பு.’ன்னு அகராதித்தனம் பேசுறாய்ங்க. என்ன பண்றது இவிய்ங்கள?” என்றார்களாம் முக்கிய நிர்வாகிகள். 

நொந்து போன செங்கோட்டையன் இதை அப்படியே எடப்பாடியாரிடம் தெரிவிக்க, அவரோ எக்கச்சக்க டென்ஷனாகிப் போயி ’தேர்தல் முடியட்டும் பார்த்துக்குறேன் அவங்கள.’ என்று கர்ஜித்தாராம். பார்த்துப்பே தேர்தல் முடிஞ்ச கையோட ஆட்சியையும் முடிச்சு வுட்டுற போறாய்ங்க! பயங்க பயபுள்ளைகளா இருப்பாய்ங்க போலிருக்கே மானாமதரயில!?