நவராத்திரி காலங்களும், அக்டோபர் மாதமும் ஜெயலலித ஐருக்கும் வரையில் அ.தி.மு.க.வுக்கு விழாக்கால மாதங்கள்தான். காரணம், கர்நாடக மண்ணின் பெண்ணான ஜெயலலிதாவுக்கு பிடித்தது நவராத்திரி. கூடவே கழகத்தின் ஆண்டு விழா வருவடும் இந்த மாதத்தில்தானே!

ஆனால் தற்போது அ.தி.மு.க.வின் அதிகார மையமாக இப்போது இருக்கும் எடப்பாடியாருக்கோ இந்த அக்டோர்பர் மாதம் மிகப்பெரிய அரசியல் சறுக்கலையும், சங்கடத்தையும் தந்திருக்கிறது! என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமையின் உள்வட்டார விவகாரங்களை அறிந்தவர்கள்.

என்ன பிரச்னை?....நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்திருக்கிறது என்று சொல்லி தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். கொஞ்சமும் எடப்பாடியார் இதை எதிர்பார்க்கவில்லை. 

இந்த சூழ்நிலையில், இந்த உத்தரவு வந்த நாளில்  கிட்டத்தட்ட முதல்வரின் சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ’இந்த தீர்ப்பை எதிர்த்து டி.வி.ஏ.சி. மேல்முறையீடு செய்யும்.’ என்று ஒரு வார்த்தையை விட்டுவிட்டார். இதை ஸ்டாலின் பிடியாய் பிடித்துக் கொண்டு ‘ஆட்சிக்கு சம்பந்தமில்லாத பொன்னையன் எப்படி டி.வி.ஏ.சி. என்ன செய்யும்? என்ன செய்ய வேண்டும் என பேசலாம்?’ என்று உலுக்கி எடுத்துவிட்டார். 

நீதித்துறையின் புருவங்களையும் உயர வைத்தது இந்த விவகாரம். இது எடப்பாடியாரின் காதுகளை சென்றடைய, பொன்னையனை கூப்பிட்டு லெஃபட் அண்டு ரைட்டு வாங்கிவிட்டாராம் மனிதர். நீதிமன்ற தீர்ப்பால் நமக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டை சரி செய்யும் வகையில் பேச வேண்டிய இடத்தில் பிரச்னையை பெரும் அளவுக்கு அதிகரிக்கும் வகையில் பேசி வைத்திருக்கிறீர்களே? என்று குதித்திருக்கிறார் எடப்பாடி. 

வெறுத்துப் போன  பொன்னையன் அதை சரிகட்டும் வகையில் மறுநாள் பேசியும் எந்த பிரயோசனமும் இல்லை. 
இந்நிலையில், ஏற்கனவே பன்னீரை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்ட டெல்லி லாபி எடப்பாடியாரை தங்கள் கையில் வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் தி.மு.க.வின் வழக்கால் எடப்பாடியாரின் செல்வாக்கு ஏகத்துக்கு சரிவதை கண்டுவிட்டு டர்ன் பண்ண துவங்கிவிட்டது டெல்லி. அவர்களின் அடுத்த டார்கெட்டாக செல்வாக்கான தினகரன் மாறியிருக்கிறார்.

எப்படியாவது தினகரனை அ.தி.மு.க.வை கையில் எடுக்க வைப்பது, அல்லது தினகரனுக்கு தோதான நபர் அ.தி.மு.க.வின் தலைமைக்கு வந்தமர்ந்தால் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இரண்டும் நேர்கோட்டில் வந்து சேரும், இந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என்பது பி.ஜே.பி.யின் கணக்கு.

அந்த வகையில் தினகரனுக்கு தோதான நபராக அ.தி.மு.க. வட்டாரத்தில் பி.ஜே.பி. நினைப்பது அமைச்சர்  செங்கோட்டையனைத்தான். இருவருக்குள்ளும் எல்லா பிரச்னைகளையும் தாண்டி ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கிறது! என்று டெல்லி நம்புகிறது. 

எனவே கூடிய விரைவில் அ.தி.மு.க.வின் பிரதான இடத்துக்கு செங்கோட்டையன் வந்தமரலாம்! என்கிறார்கள். இதன் பின் தினகரன் அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி. பக்கம் நட்பாக நெருங்கும் வாய்ப்பு உருவாகுமாம். என்னங்கடா நடக்குது அ.தி.மு.க.வுல? கவனிப்போம்.