Asianet News TamilAsianet News Tamil

ட்வீட் போட்டு மத்திய அரசை திணறடிக்கும் முதல்வர் எடப்பாடி..! வாயை பிளக்கும் எதிர்க்கட்சிகள்..!

மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரிரங்கன் தலைமையில் தற்போது புதிய கல்வி கொள்கையான முமொழிகொள்கையை வரையறுத்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

edapadi palanisamy tweeted to central govt
Author
Chennai, First Published Jun 5, 2019, 11:36 AM IST

ட்வீட் போட்டு மத்திய அரசை திணறடிக்கும் முதல்வர் எடப்பாடி..! வாயை பிளக்கும் எதிர்க்கட்சிகள்..! 

மத்திய அரசால் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, முன்னாள் இஸ்ரோ தலைவரான கஸ்தூரிரங்கன் தலைமையில் தற்போது புதிய கல்வி கொள்கையான முமொழிகொள்கையை வரையறுத்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த பரிந்துரை எடுத்துரைக்கிறது. அதன்படி பார்த்தோமேயானால், இந்தி கட்டாயம் இல்லாத மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் இந்த மும்மொழிக்கொள்கை உணர்த்துகிறது.

அதே நேரத்தில், இந்தி கட்டாயம் உள்ள மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் தேர்வு செய்யலாம் என்ற ஒரு ஆப்ஷனை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகம் வங்கதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்தியை எதிர்க்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 

குறிப்பாக தமிழகத்தில் தற்போது வரை இருந்து வரும் இருமொழிக்கொள்கை தான் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்திருந்தார். இது தவிர்த்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே  தொடரும் என சென்ற வாரம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை வரையறையில் ஆறாம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை அடிப்படையில் இந்தியை கட்டாய பாடமாக இருக்கும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர்  புதிய கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து இந்தி கட்டாயம் இல்லை விருப்ப பாடமாக எடுத்து பயிலலாம் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரவேற்பு கிடைத்தாலும் இந்த சமயத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதன் படி, மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் தமிழை விரும்பும் மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த புதிய கல்விக் கொள்கையில் இதே கருத்தை தான் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஹிந்தி கட்டாயமாக உள்ள மாநிலங்களில் முதல் மொழியாக இந்தியும்,  இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் மூன்றாவது மொழியாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்வது அவரவர் விருப்பம் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி திணிப்பு என்ற  ஒரு  விஷயத்தில் தமிழகத்திலோ திமுக பெருமளவு எதிர்த்து  வரும் சமயத்தில், எடப்பாடி பழனிசாமியும் ஒத்த கருத்தை முன் வைத்து உள்ளதால் கூடுதல் கவனம் பெற்று உள்ளது. எடப்பாடியின் இந்த ட்வீட் பற்றி எதிர்கட்சிகளே ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios