Asianet News TamilAsianet News Tamil

இது மாஸ்டர் ப்ளான் இல்ல... மரணமாஸ் ஸ்கெட்ச்!! எல்லாமே அமித்ஷா எடப்பாடி பண்ணதா? டரியலில் பன்னீர் கோஷ்டி...

அமித்ஷா எடப்பாடியின் பிளான் படி தங்க தமிழ்ச்செல்வன் செயல்பட்டுவருவதாக நமது எம்.ஜி.ஆர் இதழ் விலாவாரியாக தனது கட்டுரையில் கூறியுள்ளது.

Edapadi palanisamy and amithsha behind thanga tamizh selvam issue
Author
Chennai, First Published Jun 27, 2019, 3:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் வெளித்தது,  தினகரன் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களையும் முன்வைத்து வரும் அவர் விரைவில் அதிமுகவில் இனையலாம் என்று சொல்லப்பட்டது ஆனால், தினகரன், அவரை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என்று பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை பிஜேபி தான் பின்னால் இருந்து  இயக்குகிறது என்று அமமுகவின் நாளேடான நமது எம்.ஜி.ஆர் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில்; கடந்த நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் பிஜேபி மற்றும் அதிமுகவினருக்கு, தமிழ்நாட்டில் பலத்த வாக்குகள் விழுந்தது. 37 ஆண்டுகளாக கட்சி நடத்திவரும் கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதம் எவ்வளவு சின்னம் கிடைத்து பத்து நாட்கள் ஆன ஒரு கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை அரசியல் நோக்கர்கள் கவனிக்க தவறவில்லை.

Edapadi palanisamy and amithsha behind thanga tamizh selvam issue

அதை உணர்ந்து கொண்ட பிஜேபி ஆட்சியாளர்கள் தமிழகத்தில் உள்ள அமமுகவின் துரோகிகளை தங்கள் கூட்டணிக்கு வசம் பெற வேண்டும், ஏனென்றால் தில்லுமுல்லுகள் மோசடிகள் முறைகேடுகள் போன்றவற்றை நடத்தி நாடாளுமன்றத் தேர்தலில் பல லட்சம் வாக்குகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாங்கியது. அதனால் அமமுகவின் செயல்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் பிஜேபி அணியினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன் மோடியை ஆதரித்து டெல்லிக்கு அனுப்ப தனது குடும்பத்துடன் மேற்கொள்ளப்பட்ட பன்னீரில் பகீரத முயற்சி எடப்பாடி ஆதரிக்கவில்லை, 

தனக்கு எதிராக பன்னீர் செயல்பட்டு குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை பறிக்க, வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுத்துறை எடப்பாடிக்கு தெரிவித்துள்ளது, மக்களிடையே தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவு தனக்கு தான் என்கிற தோற்றத்தை உருவாக்கிய பன்னீர் தொடர, கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள் கூட அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கவில்லை, ஆனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக முஸ்தீபுகளை செய்த பன்னீரை அமித்ஷா, மோடி அணியினர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு பன்னீருக்கு இல்லை அவரது தொகுதியில் உள்ள மக்கள் கூட பன்னீருக்கு எதிராக பேசி வருகிறார்கள். சொந்த மாவட்டத்தில் குடும்ப அரசியல் செய்து மற்றவர்களுக்கு கூட்டணியை அழைத்து வருகிறார் என்று அமித்ஷாவுக்கு மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தான் பண்ணை அமைக்க வேண்டும் என்று அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து அமித்ஷா தற்போது தனது வேலையை காட்ட தொடங்கி விட்டார்.

Edapadi palanisamy and amithsha behind thanga tamizh selvam issue

உயிருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதால் பன்னீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நெருக்கடி விட சொந்த மாவட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் ஆனால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மிகவும் பெரிது என்று பன்னீர் தன் உதவியாளர்களிடம் புலம்பி தள்ளி உள்ளார். இதனை தொடர்ந்து தன் மகன் மத்திய அமைச்சராக வேண்டும் என்று மல்லுக்கட்டிய பன்னீரை வீழ்த்த அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

உங்க தமிழ்ச்செல்வனை அமமுகவில் இருந்து இழுத்து கொம்பு சீவி புதிய ஜல்லிக்கட்டு ஏற்படுத்தி, எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று ஆஷா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

பன்னிர்  அழிக்க வேண்டும் என்று அமித்ஷாவும், குருமூர்த்தியும் எடப்பாடியும் முடிவு செய்துவிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக எடப்பாடியும் தங்கத் தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி பன்னீருக்கு அவர் சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். இதன்  வெளிப்பாடுதான் தமிழ்ச்செல்வனின் திடீர் ஆவேசம் மற்றும் தரக்குறைவான பேச்சும்.

Edapadi palanisamy and amithsha behind thanga tamizh selvam issue

மேலும், பல அமைச்சர்களின் பிள்ளைகள், தங்கள் தந்தைகளை லாயக்கில்லை என குறை சொல்லி வருகிறார்களாம் ரவிக்கு ஒரு பன்னீர் கிடைத்தது போல தங்களை தூக்கி விட யாருமில்லை என்று அலப்பரை செய்து வருகிறார்களாம். இதனால் மற்ற அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பன்னீர் மீது வெறுப்பை காட்டி வருகிறார்கள் இவற்றையெல்லாம் மீறி அமித்ஷாவின் வியூகம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

தங்க தமிழ்ச்செல்வன் தரம் கெட்டு பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு சிலர் கட்சியை விட்டுப் போவதால் கட்சிக்கு பலன் தானே தவிர பலவீனம் இல்லை என்பதை மக்கள் செல்வர் தெளிவாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார். நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில் வண்டியில் பலர் ஏறுவதும் சிலர் இறங்கி போவதும் நடக்கத்தான் செய்கிறது ஆனால் இலக்கை நோக்கி பயணத்தை ரயில் வண்டி நிறுத்துவதில்லை பகையை வளர்க்கும் பழையன கழிதலும் உழைக்கத் தயாராக இருக்கும் புதியன புகுதலும் வளர்ந்தோங்கும் இயக்கத்திற்கு புத்துணர்ச்சியைத் தான் தரும் என்பதை தொண்டர்களும் மக்களும் அறிந்து வைத்துள்ளார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios