முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்று வரை பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி இன்றும் சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சில உத்தரவை பிறப்பித்து உள்ளார். 

அதன் படி, 

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் அது குறித்த ஆய்வறிக்கையை பெற மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடினார்.

அதன் படி, அரசு திட்டங்களின் நிறைவேற்றம் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மழை நீரை சேமிக்க வேண்டும், நீராதாரங்களை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.