அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம் அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம் என்று சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஹோட்டலில் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , சட்டமன்ற கட்சித்தலைவராக என்னை முன்மொழிந்து அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்தார்கள்.

அம்மா அரசை அமைப்பதற்கு ஆளுநரிடம் உரிமை கோரும் கட்டிதம் அனுப்பி உள்ளோம். அவர் அழைப்புக்காக எதிர்நோக்கியுள்ளோம். சின்னம்ம்மா அனைத்து சட்டமன்ற குழு தலைவராக என்னை தேர்வு செய்துள்ளார்கள் . இவ்வாறு எடப்படி பழனிச்சாமி கூறினார்.
