Echo the success of BJP in UP - a decrease of 24 Muslim MLAs

உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜக அமோக வெற்றி பெற்றதால், சட்டப்பேரவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

24 ஆக குறைந்தது

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

இந்தத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஒரு வரை கூட பாஜக நிறுத்த வில்லை. இதனால் உ.பி. சட்டப் பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது.

18 சதவீதம்

கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் 69 முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.

உத்தரப் பிரேதச மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 18 சதவீதத்துக்கு மேல் உள்ளனர்.

இவர்களுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக உள்ளது. குறிப்பாக மேற்கு உ.பி., ரோஹில்கந்த், டெராய், கிழக்கு உ.பி. போன்ற இடங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்துக்களின் வாக்குகள்

இந்தப் பகுதிகளில் யாதவர்கள் மற்றும் தலித்துகள் கணிசமாக உள்ளனர். இந்த சமூக கணக்கின் அடிப்படையில் காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்தப் பகுதிகளில் வேட்பாளர் களை தேர்வு செய்து வருகின்றன.

ஆனால், முஸ்லிம்கள் வெகு சிலரே வெற்றி பெற்றிருப்பது பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகள் கணிசமாக பாஜக.வுக்குக் கிடைத்திருப்பதையே காட்டுகிறது.

வாக்குகள் பிரிந்ததால்

முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக காங்கிரஸுடன் சமாஜ்வாதி கூட்டணி வைத்தது.

இதன்மூலம் முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு பிரிந்துவிட்டால், அது பாஜக.வுக்கு சாதகமாகி விடும் என்ற அச்சமும் நிலவியது. அதற்கேற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.