Asianet News TamilAsianet News Tamil

ஆர் கே நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் நடத்தும் சூழல் வரும்போது நடத்தப்படும்…..தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

ec report
ec report
Author
First Published Apr 10, 2017, 7:36 AM IST


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஆர் கே 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 84 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 20 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 64 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக இரண்டாக பிரிந்து அதிமுக அம்மா கட்சி சார்பில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் சார்பில் மதுசூதனன் மற்றும் திமுக சார்பில் மருதுகணேஷ் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா உள்ளிட்ட 64 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆர் கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு 4 ஆயிரம் ருபாய் கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தது. மேலும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

ec report

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. அச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியது.

ஆவணங்களை கைப்பற்றிய சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்தித்து ஆவணங்களை சமர்பித்தார். ஆவணங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாகவும் தேர்தல் நடத்தும் சூழல் வரும் போது நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ec report

 

தேர்தல் ஆணையம் இது குறித்த தகவலை 29 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

\ ELECTION COMMISSION OF INDIA Nirvachan Sadan, Ashoka Road, New Delhi – 110001.

 In re : Bye-Election to Tamil Nadu Legislative Assembly from 11-Dr. Radhakrishnan Nagar Assembly Constituency. ORDER A vacancy arose in the Legislative Assembly of the state of Tamil Nadu with effect from the 5 th December, 2016, due to demise of the member of the house, Ms. J. Jayalalithaa elected from 11-Dr. Radhakrishnan Nagar Assembly Constituency and in order to fill the said vacancy, the Election Commission of India, vide its Notification No. 100/TN-LA/1/2017 dated 16th March, 2017, in pursuance of Section 150 of the Representation of the People Act, 1951 (R.P.Act), called upon said Assembly Constituency in the State of Tamil Nadu to elect a member. Under Sections 30 and 56 of the Representation of the People Act, 1951, the Commission fixed different dates for various stages of elections and hours of poll, as under:- (a) the 23rd March, 2017(Thursday), as the last date for making nominations; (b) the 24th March, 2017(Friday), as the date for the scrutiny of nominations; (c) the 27th March, 2017(Monday),as the last date for the withdrawal of candidatures; 2 (d) the 12th April, 2017(Wednesday),as the date on which a poll shall, if necessary, be taken; and (e) the 17th April, 2017(Monday), as the date before which the election shall be completed. 2. The Commission made elaborate arrangements for conduct of free and fair poll in the constituency and in this regard issued extensive guidelines for monitoring of expenditure of the candidates and political parties, enforcement of model code of conduct (M.C.C), maintenance of law and order etc. Immediately on announcement of the bye- election, on 10th March, 2017, the enforcement of MCC was commenced by putting in place 9 Flying Squad Teams (FSTs), 9 Static Surveillance Teams (SSTs) and 2 Video Surveillance Teams (VSTs). Subsequently, the number of teams were increased in a phased manner considering complaints by the candidates, political parties and inputs from the observers and electoral machinery as shown in the table below to 30 FSTs, 21 SSTs and 10 VSTs per day as on 5th April,2017 and the same have been continuing to operate round the clock. Sl. No Team As on 10/3/2017 As on 28/3/2017 As on 2/4/2017 As on 5/4/2017 1 FST 9 25 30 30 2 SST 9 17 17 21 3 VST 2 10 10 10 Total 20 52 57 61 3 3. Generally in an assembly constituency, only 3 FSTs and 3 SSTs team are deployed during any election, but for the Dr. Radhakrishnan Nagar Assembly Constituency Bye election, the deployment of these squads was increased manifold and total of 61 teams were deployed keeping in view the sensitiveness of the constituency and past experience. Each FST/SST included 7 member Team with one Executive Magistrate, 4 CAPF personnel, one person from the state police and one videographer. VST is a 3 member team with one employee of the state government and one from state police. Thus, a total of 277 persons in 61 teams operating round the clock were put on job for enforcing the provisions of MCC, particularly, stopping distribution of cash or gifts in any form. 4. Furthermore, one Central Government Employee was included in each Flying Squad Team from 7th April onwards. Similarly, all Flying Squads / Static Surveillance Teams had a CAPF personnel attached with it. Their vehicles were GPS enabled in order to ensure that their position and movement could be monitored from a central control room. An SMS based complaint monitoring system wherein the FST/SST received a complaint through SMS for gift and cash distribution was also used. SMS and GPS based monitoring was to ensure that there is no delay in movement of these teams to attend to the complaints, a camera was also fixed on the top of vehicles so as to monitor how the 4 complaints were handled by the teams after reaching the spot, which was monitored from the DEO’s control room. 5. Considering a large number of complaints, apart from deployment of these teams, as a first time measure, 70 Mobile parties on two wheelers were also additionally deployed from 6.4.2017 onwards. Each team consisted of one Micro Observer along with one police personnel. The total 70 teams comprising 140 members, were deployed (21 Teams in Morning Shift, 21 Teams in Afternoon Shift and 28 Teams in Night Shift) from 6th April onwards. 6. Further, 10 Companies of the Central Armed Police Force (CAPF) were deployed for area domination and confidence building among the voters to ensure free, fair and inducement -free election. The deployment of CAPF was also doubled as compared to the deployment in bye election of the assembly constituency. These companies got placed in the constituency from 2 st April,2017 itself and were deployed at check posts and FST, SST to prevent any violence before and during the polls, doubtful licensed arms were deposited. 195 persons were bound under Cr. PC and 94 NBWs were executed. 7. Furthermore, the Commission deployed 3 senior observers additionally exclusively for this assembly constituency. Further, to strengthen the supervision, the Commission deployed 3 more special observers to this assembly constituency taking the number of observers to six. This again is the highest 5 deployment of central observers to any assembly constituency. The ECI was thus not leaving any stone unturned to ensure free and fair election. A team of senior officer of the Commission also visited the State to have feedback of the political parties, candidates and general public and based on their report the Commission made following additional arrangements:- a. CCTV/Surveillance Cameras were deployed in major streets and junctions in the Constituency to record the movement of vehicles and undesirable elements. b. Highly visible SVEEP campaign was launched to popularise the toll free number of the control room and to make people aware about the penal provisions on bribing of voters throughout the constituency. c. Web casting was ordered to be done in all the 256 polling stations. d. Micro observers were deployed in all the 256 booths. Micro Observes were to be appointed from employees of Central Govt, who were to supervise the voting procedure in the booths and report to the Commission through the Observers. e. The Central Government / PSU employees were to be deployed as Presiding Officer or Polling Officer and at least one member of the team was drawn from the PSU / Central Government employee.

 இடைத்தேர்தல் ரத்து ஆனதால் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். பணத்தை கொடுத்து எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவுடன் வாரி இறைத்த அதிமுக அம்மா கட்சியினர் தேர்தல் ரத்தால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

ஆர் கே நகர் தேர்தல் ரத்து ஆனது குறித்து நம்மிடம் தொலைபேசியில் பேசிய தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆர் கே நகரில் பணப்பட்டுவடா செய்வதை தடுக்க கடும் முயற்சி செய்தும் பல்வேறு நூதன வழிகளில் பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக கூறினார்.

மேலும் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே தேர்தல் நியாயமாக நடத்த முடியும் இல்லை எனில் இப்படித்தான் என்றார்.

மேலும் ஆர் கே நகருக்கு மறு தேர்தல் நடத்துவது தற்போது இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.  

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios