EB employees strike from today
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஊழியா்கள் அறிவித்த பேலை வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இதையடுத்து மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு கையெழுத்திட்ட முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பா் மாதம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு சூழல்களை காரணம் காட்டி தற்போது வரை ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முடிவுக்கு வராத நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கபபட்டது. இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன..

இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் இன்று தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இது தொடா்பாக தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைவா் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளா்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது என கூறினார்.
