எடப்பாடி  அதிரடி..! ஒவ்வொரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 2000 ..! எதற்கு.. யாருக்கு தெரியுமா..? 
 
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இதன் அடுத்தாக கட்டமாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக மாதம் ரூ.2000 வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சட்டசபையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் காணப்படும் வறட்சி மற்றும் கஜா புயல் தாக்கம், விவசாய நிலங்கள் அழிவு, தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் வாடும் ஏழை எளிய விவசாய பெருமக்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 வழங்க அரசு முடிவு செய்து  உள்ளதாக தெரிவித்து உள்ளார் முதல்வர்.அதுமட்டுமல்லாம் மற்ற சிறு குறு தொழில் செய்யும் மக்களும் பயன்பெற உள்ளனர்.  

யாரெல்லாம் இந்த திட்டம் மூலம் பயன் பெற முடியும் தெரியுமா..? 

கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் என பட்டியலில் வருகிறாரகள்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பட்டியலை தயாரித்து இந்த  ஆண்டு அவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய். 2000 வழங்க திட்டமிட்டு  உள்ளோம். இதன் மூலம், கிராமப்புறத்தில் மட்டும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், மொத்தத்தில் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இந்த திட்டதற்கு மட்டும் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார் முதல்வர்