கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்து கட்சி நடத்தி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா இன்று புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி ஏழுமலையானை சிறப்பு தரிசனத்தில் சென்று தரிசித்து திரும்பினார். இந்த செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திமுகவை பொறுத்தவரை அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொது வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒரு முறை திமுகவின் தற்போதைய பொருளாளர் துரைமுருகன் சாயிபாபா கோவிலுக்கு செல்ல அடுத்த கணமே திராவிட கழக தலைவர் வீரமணி பெரியார் கொள்கையை திமுக மீறிவருவதாகவும் இதனால் பாதிப்பு திமுகவிற்கே என்று அறிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி துரைமுருகனை கண்டித்ததுடன் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது திமுக தலைவர் மனைவி ஊடகங்களில் தெரியும் வண்ணம் தொடர்ந்து பிரபல ஆலயங்களுக்கு சென்றுவருகிறார். இன்று  திருமலையில் தரிசனம் செய்து திரும்பியுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலானது. இதனையடுத்து  திமுக அமைப்பு செயலாளர் பார்த்தசாரதியை தொடர்ந்து திராவிட கழக தலைவர் வீரமணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பெரியார் கொள்கையை யாரும் மதிப்பது இல்லை. ஸ்டாலின் மனைவி எல்லா கோவிலுக்கும் செல்கிறார். தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் விஜய தசமி அன்று அரசியில் ஓம் என்று எழுதுகிறார். இதுதான் உங்கள் பகுத்தறிவா? என்று வீரமணி கோபத்தில் கொந்தளித்து வருவதாக கூறப்படுகிறது.