Asianet News TamilAsianet News Tamil

டெபாசிட்டுக்குக்கூட வழியில்லாத கட்சிகளெல்லாம் மிரட்டுதேய்யா... கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றும் துரைமுருகன்..!

தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட்டுக்குக் கூட வழியில்லாத கட்சிகளெல்லாம் நம்மை மிரட்டிப் பார்க்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. நம் வழி, தனி வழியென்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்

duraimurugan who hates coalition parties
Author
Tamil Nadu, First Published Jan 7, 2021, 12:14 PM IST

கருணாநிதியின் சேவகனாக இருந்து, எல்லா நேரங்களிலும் கருணாநிதியை புகழ்ந்துபேசிவந்த துரைமுருகன், இப்போது பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்து வருகிறார். தான் ஒரு சீனியர் என்பதையும் தாண்டி ஸ்டாலினை புகழ்ந்துபேச வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். இந்நிலையில் தி.மு.க.வுக்கு துரைமுருகன் ஒரு புது ரூட் காட்டுவதாகத் தகவல். அதாவது, ‘நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்போம்’ என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு சூடு ஏற்றிக்கொண்டு இருப்பதாக தகவல்.duraimurugan who hates coalition parties

திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், ஐஜேகே, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள், அதிக சீட் கேட்டு நச்சரித்து வருகின்றன. குறிப்பிட்ட தொகுதிதான் வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்களின் தொடர் வலியுறுத்தல், திமுக நிர்வாகிகளை எரிச்சலடையச் செய்துள்ளது.duraimurugan who hates coalition parties

அண்மையில் அறிவாலயத்தில் நடைபெற்ற வழக்கமான ஆலோசனையின்போது துரைமுருகன் ரொம்பவே சீறியிருக்கிறார்.’’தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட்டுக்குக் கூட வழியில்லாத கட்சிகளெல்லாம் நம்மை மிரட்டிப் பார்க்கின்றன. இதை அனுமதிக்கக் கூடாது. நம் வழி, தனி வழியென்று போய்க் கொண்டே இருக்க வேண்டும்’’என கொந்தளித்துள்ளார். துரைமுருகன் இப்படி பேசுவதற்கு காரணம் இருக்கிறது என்றே சொல்கிறார்கள். அதாவது, பா.ம.க.வை எப்படியும் உள்ளே கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார்.

duraimurugan who hates coalition parties

அதனால், இப்போதைய கட்சிகளை வெளியேற்றினால் மட்டுமே அதற்கு சாத்தியம் என்பதால், தனித்து நிற்கலாம் என்று சொல்லி, கூட்டணிகளை வெறுப்பேற்றி வருகிறார் என்கிறார்கள். துரைமுருகன் சொன்னதைக் கேட்டால் நிச்சயம் தி.மு.க.வுக்குத் தோல்விதான் ஏற்படும் என்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் யோசித்துவருவதுதான் தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது. ஏனென்றால், எப்போதுமே கடைசி நேரம் பிரச்னையை உருவாக்கிக்கொள்வதுதானே தி.மு.க.வின் நிலைப்பாடு. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios