Asianet News TamilAsianet News Tamil

வைகோ, திருமாவை நம்பமுடியாது... ஸ்டாலினை எச்சரித்த துரைமுருகன்..!

ஏன்டா தி.மு.க.  கூட்டணியில வந்து சேர்ந்தோமோ? இவங்க கூட பாடாய்பட்டு ஜெயிக்கிறதுக்கு பதிலா, தனியா நின்னு ஓட்டுகளை பிரிச்சு இவங்களை தோற்கடிச்சிருக்கலாம் பேசாமல்!...என்று ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் உருமுமளவுக்கு நிலவரம் கலவரமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

Duraimurugan warned mk Stalin
Author
Tamil Nadu, First Published Feb 25, 2019, 2:10 PM IST

ஏன்டா தி.மு.க.  கூட்டணியில வந்து சேர்ந்தோமோ? இவங்க கூட பாடாய்பட்டு ஜெயிக்கிறதுக்கு பதிலா, தனியா நின்னு ஓட்டுகளை பிரிச்சு இவங்களை தோற்கடிச்சிருக்கலாம் பேசாமல்!...என்று ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும் உருமுமளவுக்கு நிலவரம் கலவரமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். 

என்ன பிரச்னை?.... காங்கிரஸுக்கு பத்தும், முஸ்லீம்லீக்கிற்கு ஒன்றும் கொடுத்தது போக தி.மு.க.வின் கையில் இப்போது இருப்பது 29 சீட்கள். இதில் வைகோ, திருமா, முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகளுக்கு தலா ஒன்று என நான்கை ஒதுக்கிவிட்டு ரவுண்டாக இருபத்து ஐந்தில் போட்டியிடலாம் என ஸ்டாலின் நினைத்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை வந்த அத்தனை சர்வே முடிவுகளும் தி.மு.க. கூட்டணிக்கே பலம்! என்று சொல்லியதால் இந்த முடிவு. Duraimurugan warned mk Stalin

ஆனால் இன்னமும் சீட் பெறாத நான்கு கட்சிகளும் ஆளாளுக்கு தலா ரெண்டு கேட்கிறார்கள். அதில் நான்கு போய்விட்டால் மீதி 21தான் இருக்கிறது. இதுபோக ஒரு வேளை தே.மு.தி.க.வும் இந்த கூட்டணிக்குள் வந்தால் மூன்று சீட்கள் தர ஸ்டாலின் ரெடி. ஆனால் அவர்களோ அ.தி.மு.க. கூட்டணியில் இப்படி குறைந்த சீட் கிடைப்பதாலேயே இழுபறி நிலை நீடிக்கிறது! என்று சொல்லி, அங்கே பா.ம.க. பெற்றிருக்கும் ஏழு சீட்களை விட அதிகமாக பத்து சீட்டுகள் வேண்டும், அல்லது எட்டாவது ஒதுக்கியே தீருங்கள் என்கிறார்கள். Duraimurugan warned mk Stalin

இவ்வளவை அள்ளிக் கொடுத்துவிட்டு பதினைந்துக்கும் குறைவான இடங்களில் போட்டியிட தி.மு.க. ஒன்றும் கோமாளி இல்லை. சீட் ஒதுக்கீடு பிரச்னையே இன்னமும் முடியவில்லை. இதற்குள், ‘காங்கிரஸ் தவிர எங்கள் கூட்டணிக்குள் வரும் அத்தனை கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.’ என்று துரைமுருகன் கடந்த சில நாட்களாக ஒரு தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறாராம். இதில் திருமா, வைகோ ஆகியோர் கடும் அப்செட். இரு கம்யூனிஸ்டுகளுமோ ‘இந்த பப்பெல்லாம் நம்மகிட்ட வேகாது. இது அவங்க ரெண்டு பேருக்கும்தான்.’ என்று கெத்தாய் வலம் வருகின்றனர். Duraimurugan warned mk Stalin

உதயசூரியன் சின்னத்தில்தான் ம.தி.மு.க. மற்றும் வி.சி.க. இரண்டும் போட்டியிட வேண்டும் என்று தான் கூற காரணம் என்ன? என்பதை விளக்கியிருக்கும் துரைமுருகன் “திருமா, வைகோ ரெண்டு பேரையும் காலாகாலத்துக்கும் நம்ப முடியாது. ரிசல்ட் வந்த மறுநாளே எதிர்திசையில நின்னு குரல் கொடுக்க துவங்கிடுவாங்க. கடந்த சட்டமன்ற தேர்தல்ல இவங்க ரெண்டு பேராலேதான் நம்மளோட ஆட்சி கனவு பலிக்காம போச்சு. அதனால விபரீத விளையாட்டே வேணாம். ஜெயலலிதா பண்ற மாதிரி நம்ம சின்னத்தில் போட்டியிட வையுங்க, அப்போதான் கட்சி தாவலை தடுக்க முடியும்.

 Duraimurugan warned mk Stalin

இதுக்கு ஒத்து வர்லேன்னா கழட்டி விடுங்க தம்பி. இவங்களாலே அ.தி.மு.க. கூட்டணிக்கு போகவும் முடியாது, தனியா நிக்கவும் தைரியம் கிடையாது. அவங்க கழுத்துல கத்தியை வெச்சுட்டு, கையில் சீட்டை கொடுங்க. இல்லேன்னா நம்ம தலைக்கு ஆபத்தாகிடும்.” என்றாராம். துரை சொல்வதில் இருக்கும் நியாயத்தை புரிந்து ஸ்டாலினும் அதற்கேற்ற மாதிரி வார்த்தைகளை விடத் துவங்கியுள்ளதால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அறிவாலயம் வரும் நட்புக்கட்சிகள் அரண்டு, மிரண்டு புலம்புகிறார்களாம். Duraimurugan warned mk Stalin

‘எங்களோட மைனாரிட்டினஸை ஒரு ஆயுதமா பயன்படுத்தி, இப்படி மிரட்டினால் நாங்களெல்லாம் அரசியல்ல வளர்றது எப்படி? எங்களுக்குன்னு ஒரு தனித்த சின்னம் வேணும்னா நாங்க எங்களுக்கு விரும்பமான சின்னத்துல நின்னு ஜெயிச்சால்தானே முடியும்? நீங்க பண்றது சர்வாதிகாரம்தானே?” என்கிறார்களாம். ஆனால் சிரிக்கும் துரை டீமோ ‘சர்வாதிகாரம் செய்யப்போய்தான் ஜெயலலிதாவா தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடிக்க முடிஞ்சுது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற முடிஞ்சுது. நிபந்தனை ஏற்றால் இருங்க, இல்லேன்னா நட்பாய் பிரிஞ்சுடலாம்.” என்றிருக்கிறார்கள். யாரை குத்தம் சொல்றது? ஆனைக்கும் பானைக்கும் சரியாதான் இருக்குது.

Follow Us:
Download App:
  • android
  • ios