ஜெயலலிதாவிற்கு தெரியாமலே அவரது சொத்துக்களை அபகரிப்பதற்காகவே அவருடைய கை ரேகை வைக்கப்படுகிறது எனதிமுக துணைப்பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக துணைப்பொதுசெயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது,

தற்போது அதிமுக அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது.உடல் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, தற்போது நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படியெனில், தஞ்சைஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க ஏன் ரேகை வைத்தார் என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெயலலிதாவிற்கு தெரியாமலே அவரது சொத்துக்களை அபகரிப்பதற்காகவே அவருடைய கை ரேகை வைக்கப்படுகிறது என்றும், 

ஜெயலலிதா குனமடைந்தபின் யார், யாரெல்லாம் சிறை செல்வார்கள் என்பது தெரியவரும் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.