பகுத்தறிவு பேசும் திமுகவில் முக்கியப்பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் தனது மகனின் அறிமுகக் கூட்டத்திற்கு அனுப்பியபோது பூஜை அறையில் வைக்கப்பட்ட திருநீர், குங்குமத்தை வைத்து ஆசிர்வதித்து அனுப்பினார். 

திமுகவின் கொள்கைகளான திராவிடம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றை கருணாநிதிக்கு அடுத்து அக்கட்சியில் இப்போதுள்ள தலைவர்களின் அதிகம் முழுங்கியவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவில் சீட் பெற்று வேலூர் மக்களவை தொகுதியில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் இன்று வாணியம்பாடி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பிய கதிர் ஆனந்துக்கு பூஜையறைக்குள் சாமி கும்பிட்ட திருநீர், குங்குமத்தை நெற்றியில் வைத்து ஆசிர்வாதம் வங்கி வெற்றியோடு வா மகனே என வழியனுப்பி வைத்தார் துரைமுருகன்.

 

துரைமுருகன் மட்டுமல்ல, கனிமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பகுத்தறிவு பாதையில் இருந்து தடம்மாறுவதை சமீபகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.