சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால், சபாநாயகர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறினார். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை பாதுகாவலர்களால் வலக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில், திமுக செயல் தலைவர், பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து கவர்னரிம், திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் இன்று நடக்கிறது. திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற, திமுக துணை பொது செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானமே தவறு. சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
