duraimurugan condemns dhanabal in assembly
சட்டசபையில் நான் நினைத்தால் தான் விவாதிக்கமுடியும் என சபாநாயகர் கூறுகிறார். இஷ்டப்படி சபையை நடத்த இது உங்கள் அப்பன் வீட்டு இடமா என எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் ஆவேசமாக கூறினார்.
இவ்வளவு பெரிய பிரச்சனை தலைமை செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை இது நாங்கள் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது.

இதை சபாநாயகர் அனுமதிக்க வேண்டாமா? அவர் சொல்கிறார் நான் நினைத்தால் தான் அனுமதிப்பேன் என்கிறார். நான் சொன்னேன் நீங்கள் இந்த விவகாரத்தை அனுமதிக்காமல் இருந்தால் உங்கள் மீதுதான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது நீங்கள் அதிமுக அவைத்தலைவராக செயல்படாதீர்கள் என்று தெரிவித்தேன். நான் நினைத்தால் தான் அனுமதிப்பேன் என்று சொல்ல இது உன் அப்பன் வீட்டு இடமா? என்று கேட்கிறேன்.
மிகப்பெரிய அளவில் அமைச்சர்கள் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தலைமை நிலை என்ன நாடு அதை எதிர்பார்க்கிறது. தைரியமிருந்தால் வெளியிட்ட ஊடகம் மீதும் பத்திரிக்கை மீதும் வழக்கு போடவேண்டியது தானே இவ்வாறு துரை முருகன் கூறினார்.
