கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அங்கு திமுவினர் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர். ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ள நிலையில், திமுகவினரும் திரண்டதால் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
