இன்று கூடவுள்ள  திமுக செயற்குழுக் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், திமுக தலைவராக ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்கு பொதுக்குழுவைக் எப்போது  கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. அப்படி முடிவு செய்யப்பட்ட தேதியில்  பொதுக்குழு கூடி ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரை முருகன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தி.மு.., தலைவர்கருணாநிதி, வயதுமுதிர்வுமற்றும்உடல்நலக்குறைவால், ஆக., 7ல்காலமானார். அவரதுஉடல், மெரினாவில்உள்ளஅண்ணாதுரைநினைவிடத்தில்,நல்லடக்கம்செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நினைவிடத்திற்கு, தினமும்ஏராளமானதொண்டர்கள், பொதுமக்கள்வந்து, அஞ்சலிசெலுத்திசெல்கின்றனர்.

இந்நிலையில், தி.மு.., செயற்குழுகூட்டம், அக்கட்சியின் செயல்தலைவர்ஸ்டாலின்தலைமையில், சென்னைஅறிவாலயத்தில், இன்றுநடக்கிறது. இந்தகூட்டத்தில், கருணாநிதியின்மறைவிற்கு, மவுனஅஞ்சலிசெலுத்தப்படுகிறது.

முக்கியநிர்வாகிகள், கருணாநிதிக்குபுகழ்அஞ்சலிசெலுத்தஉள்ளனர். அதன்பின், இரங்கல்தீர்மானம்நிறைவேற்றப்படவுள்ளது..

செயற்குழுகூட்டத்திற்குபின், பொதுக்குழுவைகூட்டுதல், தலைவராகஸ்டாலினைதேர்வுசெய்தல்மற்றும்கட்சிநிர்வாகிகளைமாற்றிஅமைத்தல்உட்பட, பலவிஷயங்கள்குறித்து, அடுத்தடுத்துஆலோசிக்கப்படலாம்என, கூறப்படுகிறது.

தலைவர் மட்டுமல்லாமல் தற்போது திமுகவிற்கு பொருளாளர் பதவியும் நிரப்பப்படவுள்ளது. ஏற்கனவே திமுக பொருளாளராக ஸ்டாலின்தான் இருந்து வருகிறார். கருணாநிதி உடல் நலம் குன்றியபோது, பொருளாளர் பதவியுடன் ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் திமுகவுக்கான புதிய பொருளாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் செயற்குழுவைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளாராக துரை முருகனும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.