தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கடந்த ஆண்டு ரெய்டு நடந்தது. அவரது துறையில் பணியுடங்களை நிரப்புவதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் பிரச்சனை வருமான வரித்துறை மூலம் பூதாகரமாகியுள்ளது. அமைச்சர் விஜய பாஸ்கர் 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

 

மேலும் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்ரின் வீட்டில் கடந்த வாரம் சிபிஐ ரெய்டு நடந்தது. இது தமிழக அரசுக்கு  பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கரை பதவி விலக வேண்டும் என இபிஎஸ் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.

 

ஆனால் 30 எம்எல்ஏக்களுடன் டி.டி.வி.தினகரனுடம் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன் என முதலமைச்சரை அவர் மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்  நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. குட்கா ரெய்டு வழக்கில் சிக்கிய அவருக்குப் பதவி வழங்கப்பட்டது விமர்சனத்தை உண்டாக்கியது.

 

இது குறிதது  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தி.மு.க பொருளாளர் துரைமுருகன், "மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்கின்றார், மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறார். முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் மின்சார நிலைமையை கலந்தாலோசித்த பின்பு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி கொடுக்கவில்லை என்றால் யாரையாவது காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தால் அவருக்கு கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் துரை முருகன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.