கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் ,விசிக மற்றும் இடது சாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில்  வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

அந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் மீது பணப் பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து அந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனால் அப்செட் ஆன  துரை முருகன் இது குறித்து ஸ்டாலினிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  38 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று வெற்றி பெற்ற திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். பொன்முடியின் மகன் சிகாமணி, கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு போன்றோர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரை முருகன், திமுக கட்சியைச் சேர்ந்த எத்தனையோ பேருக்கு எவ்வளவே பண்ணியிருக்கேன்… ஆனால் எனது மகனை இப்படி எல்லோரும் அம்போன்னு விட்டுட்டாங்களே என புலம்பித் தள்ளியுள்ளார்.

நான் எதிர்பார்க்காத ஆளெல்லாம் எம்.பி.ஆயிட்டாங்க, ஆனால் என் மகனை என்னால எம்.பி.ஆக்க முடியலையே என வயிற்றெரிச்சலில் தனது ஆதவாளர்களிடம் புலம்பி வருகிறார்.