Durai Murugan press meet about jayakumar in 2g case

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு ட்ரெயல் கோர்ட்டில் தண்டைனை வழங்கியதற்கும், 2 ஜி வழக்கில் டெல்லி ட்ரெயல் கோர்ட் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தற்கும் வித்தியாசம் தெரியாமல் அமைச்சர் ஜெயகுமார் உளறுவதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆ.ராசா மற்றும் கனிமொழியை விடுவித்தாலும் டெல்லி உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கும் என கூறினார்.

அமைச்சர் ஜெயகுமாரின் கருத்தை மறுத்த திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு ட்ரெயல் கோர்ட்டில் தண்டைனை வழங்கியதற்கும், 2 ஜி வழக்கில் டெல்லி ட்ரெயல் கோர்ட் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தற்கும் வித்தியாசம் தெரியாமல் அமைச்சர் ஜெயகுமார் உளறுவதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்தபோதும், கர்நாடக உயர்நிதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்னை வழங்கியுள்ளதை மறந்துவிட்டு ஜெயகுமார் பேசுவதாக கூறினார்.

2ஜி வழக்கில் ட்ரெயல் கோர்ட் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரை விடுவித்ததேயொழிய அவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை என துரைமுருகன் குறிப்பிட்டார்.